vinayaka in riverநீருமற்று மணலுமற்று
உயிர்ப்பற்று
சுரண்டல் மட்டுமே
கரைபுரளும் நதிகளில்
தலை துண்டிக்கப்பட்டு
சிதைந்த முகத்தோடு
கை கால்கள் நசுங்கி குப்புற
கிடக்குது மூர்ச்சையான பக்தி..
கேள்வி கேட்டால்
எல்லோர் வாய்களிலும்
அடைத்துக் கிடக்கிறது
விடைகளுக்குப் பதில்
கொழுக்கட்டைகள்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.