அதிகாலை பொழுதிலும்
அந்திசாய்ந்த வேலையிலும்
நடையாய் நடக்கிறார்கள்.
ஒரு சிலரின் கையில் கம்பு
சிலரின் கையில் நாய்க்குட்டி
என அவரவர் விருப்பத்திற்கேற்ப
பிடிமானங்களுடன்
நடையாய் நடக்கிறார்கள்.
பெண்களின் பின்சரியும்
ஜடையைப்போல
முன்சரிந்த வயிறுகளைச் சுமந்தவாறு
நடக்கும் ஆண்களைப் பார்க்கையில்
வினோதமாயிருக்கிறது.
சர்க்கரை குறைக்க
கொழுப்பு குறைக்க
ரத்த அழுத்தம் குறைக்க என
அதிகரித்ததை குறைக்க
பெருங்கவலையோடு
நடக்கிறார்கள்.
அவர்களின் பின்னே
கையேந்தி யாசகம் கேட்டு
சுற்றிவருபவனின்
விலா எலும்புகளை
முறைத்துப் பார்க்கின்றன
நடைபயில்பவர்களின்
பிடியில் உள்ள நாய்கள்.
குறைத்தலாய் விரட்டுகின்றன குரல்கள்
" சில்லரை இல்லை போ"
- ப.கவிதா குமார் (
கொழுப்பு
- விவரங்கள்
- ப.கவிதா குமார்
- பிரிவு: கவிதைகள்
More articles by ப.கவிதா குமார்
- தெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன் (02 ஜன 2018)
- இயக்குநர் பாலா படங்களில் போலீஸ் (15 டிச 2017)
- என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்? (12 டிச 2017)
- மறக்கப்பட்ட புரட்சிதாசன் (29 நவ 2017)
- சிவகங்கை சீமையில் தொடரும் தீண்டாமை - உண்மை அறியும் குழுவிடம் கதறிய தலித் மக்கள் (09 பிப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.