புகை வண்டி கடப்பதற்காக‌
நிலவு நிற்குமா  நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
வெட்கம் சூழ்ந்த
உன் முகத்தைக் கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி
நிச்சயம் சொல்லியிருக்கவேண்டும்
'பாவம் அவனை ஒரு முறை பார்த்துவிடு என்று!!'
திரும்பினாய்
'என்ன வேண்டும்!!!' என்றாய்
ஏதும் அறியாதவள் போல்,
'உன் காதல்' என்றேன் ...
மறுகணம் மேகம் மறைத்த நிலவைப் போல்
மக்கள் கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!!
'மெதுவாகவே எடுத்துவா
உன் காதலை!!!
காத்திருப்பேன்  
என் வாழ்க்கையோடு!!!
 
-       பா.  நாகராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It