முதற்கதிர் புவி தொடும் பொழுதில் 
தினமும் காண்கிறேன் 
சூழ்ந்த எதையும் உணராது ,
ஆலயத்தின் படியில் நின்று 
இலயத்துடன் இதழ்களசைய 
மந்திர உச்சாடானம் செய்வதென 
கரம் குவித்துப்
பிரார்த்திப்பவரை

கெஞ்சலோ கேவலோ இன்றி 
தலையுயர்த்திய புள் போலும் 
நிலந்தொடும் பசுங்கன்றை 
ஒப்பவும் 
இத்தனை அழகாய் 
வணங்குபவரின் வேண்டுதல் 
நிறைவேறாததேன் என 
மனம் விகசிக்கையிலேயே ...
தோன்றுகிறது 
அதனால் தானோவென

 - கா.சிவா

Pin It