ஆயிரம் கைகளிருந்தும்
தேர்மீது ஏறி வரும்
அம்மன் பரவசமடைகிறாள்
கைக்கு எட்டாத பலூன்களைப் பார்த்து.
வடம் பிடிக்காமலே இழுத்துச் செல்கிறான்
பலூன்காரன் திருவிழாவைப்
பரவசமாய்.

- சதீஷ் குமரன்

Pin It