ஒரு நெல் மணியை
விளைவிக்கத் தெரியாதவர்கள்
ஒரு திணை அரிசியை
விளைவிக்கத் தெரியாதவர்கள்
ஒரு சாமையை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஒரு கம்பரிசியை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஒரு காய் கனியை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஊரறிய விளைவிக்கிறார்கள்
கடவுள் தோட்டத்தின்
சாவி தங்களிடம்தான் விளைகிறதென்று
வெற்று வார்த்தைச் சவடாலில் .
வாய்விட்டுச் சிரிக்கிறார் கடவுள்..
சீடர்களின் செவிகளில் நூற்றாண்டுக் கழிவுகள்..!!

- சதீஷ் குமரன்

Pin It