பொருள் புரிய அருள் நகரும்
தவம் களைய தாகம் வளரும்
சரிக்குள் தான் சம்மணமிட்டிருக்கும் தவறு
நீண்ட இடைவெளிக்குள் வட்டநிலை எட்டும் நிலை
பூஜ்யக் கோட்டில் வளைந்து பார்க்கிறது நகர்வு
கோலமிட்ட விரல் சப்பும் எறும்புக்கு எருமை மனம்
அடிபட்ட கனவுக்குள் சுற்றி அலையும் பாம்பு
நகம் வெட்ட ராத்திரிக்கு நீளும் பிராண்டல்
முக்காடிட்ட புறாவுக்கு சிறகசைதல் சுய இன்பம்
நூறு நாள் முடியும் முன்
எலும்பு உடைபடுதல் பிணத்தின் வலிமை
நறநறக்கும் மணல் வழி தான்
பாதம் விட்டுச் சென்றவன் மதியம் இருக்கிறது
கண்கெட்ட பிறகு நாவால் நமஸ்கரிக்கும் காமம்
கைப்பிடித்த கல்லூரி தேவதைக்கு
அடுப்படியில் சிலை வைத்தான்
காதலித்து கைப்பிடித்த கவிதைக்காரன்...!

- கவிஜி

Pin It