பிறக்கும்பொழுதே
பூக்களோடு பிறக்கின்றது
பிளாஸ்டிக் செடி!

*

வண்டு தரும்
முத்தத்திற்காக
ஏங்குகின்றன கண்ணாடிப் பூக்கள்!

*

பாவம் அவைகளுக்கு
யார் சொல்லுவது,
அவைகளின்மீது படிந்திருப்பது
மகரந்தத் துகள்கள் அல்ல,
தூசுகள் என்று?

- வைரமணி

Pin It