அருகிருக்கும் மேசையில் வைக்கப்பட்ட
தனிமைக் கோப்பையில்
நிரப்பப்படுகிறது நினைவுமது

தீனிகள் கனக்கும் தட்டை
ஏந்தி வந்த பரிசாரகர்
மறுகையிலிருக்கும் கிடுக்கியில் நெருக்கி
மதுவுக்குள் போட
ஐஸ் கட்டியென மிதக்கிறேன்

நுரைக்கும் குமிழிகள் வெடிக்க
காற்றில் கலக்கிறது
துயரப் பாடல்.

சிவ.விஜயபாரதி

Pin It