ஜன்னல்
உனக்கு மூடுவதற்கு
எனக்கு திறப்பதற்கு

*
மறுகன்னம்
இதயத்திலும் இருக்கிறது
அறைந்து பார்

*
உனக்கும் எனக்குமான
இடைவெளிகள்
பூக்கள் விடும் தூதுகளுக்கானது

*
நீ நடக்கையில் உன் வாசங்களால்
ஆசீர்வதிக்கப்படுகிறது
யூக்கிளப்டிஸ் மரங்கள்

*
வேறு வழியின்றி மூடிய
இதழைத் திறப்பது
நான் முத்தமிடவா நீ சத்தமிடவா

*
சித்திரங்கள் செய்வது
எல்லாமே பழையன
சித்திரங்கள் உனை
கொய்வதுதான் புதியன

*

- கவிஜி

Pin It