மரத்திற்கு அடியில் விழுந்திருக்கும்
மலர்களில் ஒன்றை
இரு விரல்களால் மென்மையாக
எடுத்து அம்மாவிடம்
கொடுக்கும் குழந்தையின் பிரயத்தனம்
உன் சொற்களில்.

---

கடைவீதிகள் நிறைந்த ஊரில்
ஜவுளிகளோடும் பண்டிகை பட்சணங்களோடும்
சாரை சாரையாய் வந்து கொண்டும்
போய்க் கொண்டுமிருக்கும் மக்களுக்கிடையில்
ஆறாவது மாடியிலிருந்து
வேடிக்கை பார்க்கும் வேலையற்றவனின்
இரவில் சாமரம் வீசும் காதலியாய்
வாழவே விரும்புகிறாள்
பிரபல ஜவுளிக்கடையின் விளம்பர மாடல்.

- சீதா

Pin It