மனதில் ஓடும் எண்ணங்களை
எனதிரு கைகளால் அள்ளித் தெளிக்கிறேன்
படுக்கையின் மீது.......
அவை துளித்துளியாகப் பெருகி
தேகச்சுவர் தாண்டி உயரே பறக்கிறது
பருவத்தின் நீட்சியாய்........
என் கனவு தேசத்தின் மேய்ப்பராய் நீயிருக்க
அளப்பறிய பேரின்பம் ஊற்றெடுக்கும்
உன் மனவோடையில் நனைந்த
என்னை எழுப்புவதாயில்லை..........
உன் கைகளுக்குள் என்னை வசப்படுத்தி
முத்தத்தின் வெம்மைதனில் தேகப்பூக்களை பரவசமூட்டி
வெண்பனியை வாரி இறைக்கிறாய்.....
உடல்முழுக்க நிரம்பி வழிந்த பின்னும்
மேகங்களுக்குள் அலையும் நிலவைப்போல
மீண்டும் கைகளை ஏந்துகிறேன்
உன்னிடத்தில். .....
இளைப்பாறிக்கொள்ளும் கனவுகளைத் தேடி...........

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It