எப்போதும் நனையலாம்
அவள் வாசலில்
உடைந்தே கிடக்கிறது
ஏதாவது ஓர் இதயக் குழாய்

*****

கண் மை குங்குமம்
உதட்டுச் சாயம்
ரோஸ் பவுடர்

வண்ணங்களில்
பெய்தது மழை

நனைந்தவள் சாட்சி

- கவிஜி

Pin It