இருள் அடர்ந்து
செல்லும் இந்த ஒற்றை அடிப் பாதையின் கனம் மட்டும்
இலகுவாய் கடக்கிறது எந்தக் கணத்தையும்.
காற்றின் சொற்கள் பயம்
உடைக்கிறது
நெடிதாய் செல்லும் வழிகளில்
சிங்கமுத்து தாத்தா கண்களை உருட்டி அருகே வந்து வந்து போவதாகவும்
வயிறு வலிக்கு தூக்கிட்ட ரங்கநாதன் பெரியப்பா மதுபோத்தல் கேட்பதாகவும்
தங்கம் பாட்டி தலைவிரி கோலத்தில் நாக்கு துருத்திக் கிடப்பதாகவும்,
ராசாத்தி அக்கா தன் காதலன் மாணிக்கத்தை தேடியலைவதாகவும்
சொல்லிய நீங்களும் தான்
அடுத்த அடுத்த திங்கள்களில்
அங்கு இடம் பெயருகிறீர்கள்.
பாதையின் உச்சியில்
தேய்ந்து தேய்ந்து வளரும்
சந்திரன் மட்டும் உங்களது பேச்சுக்கு அப்பாற்பட்டது!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It