bad dreamஇரவுகளின் நீளம்
நீண்டு செல்கிறது
மீதமிருக்கும் இரவின்
கனவுக்குள் நுழைகிறேன்
பெருகி நிற்கிறது
கனவும் அதன் காட்சிகளும்
பரந்த வெளியது
வனத்தை இறகுகளில் சுமந்து பறக்கின்றன
பறவைகள்.
சருகுகளில் மிதக்கிறது
நதி.
குளத்தை சுமந்தபடி
நீந்துகின்றன மீன்கள்.
காற்றை அழைத்துப் போகின்றன
மேகங்கள்.
நான் கனவை
உடலில் கட்டி இழுக்க
எனது நகரமும்
எனது இருப்பிடமும் அசைகின்றன
கனவை உடைத்து வெளிய வருகின்றேன்
எனது அறை முழுவதுமாய்
அலமாரியின்
கண்ணாடித் தூள்கள்.
வெட்கம் கெட்டு நிற்கிறது
சுவரின் ஓரமாய் கனவு
ஊளையிடத் தொடங்குகிறாள்
அவள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்

More articles by ஏ.நஸ்புள்ளாஹ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.