பனி கசியும்
ஒவ்வொரு இரவுப்பொழுதிலும்
அவனங்கமெங்கும் வெம்மை பரப்பி,
மேற்குறங்கின் சேணம்பொருத்தி,
குழல்களைத் தேர்த் தோள்களில்
சிறகுகளாய் விரித்து,
நிர்துகிலுடுத்தி,
புரவிப்பயணமாய்
பறக்கின்றாள்
அந்த தேவதை.

- பிரபு பாலகிருஷ்ணன்

Pin It