முன் நெற்றியில்
முடி ஒதுக்கு!
முகவாய் தூக்கிக் கொஞ்சு!
கைகள் பற்று!
கதை பல பேசு.
கண் நோக்கு!
கவிதை சொல்!
விலகிப் போ!
விரைந்து வா!
பயணம் செய்..
பாதியில் திரும்பு!
தொலைந்து போ..
தேடி வா!
தீர்ந்து போ!
நிரப்பித் தீர்!
ப்ரியங் கொள்..
பிரிந்து போ!
வெறுமை கொள்!
நிரம்பித் ததும்பு!
போ...
முதலில் இருந்து மறுபடி ஆரம்பி!

- இசைமலர்

Pin It