வனத்திடைத் துலாவி
கண்டடைதலின்
பிறகொரு நாளில்
வெட்டப்பட்டது மூங்கில்

துளைகள் நிரப்பப்பட
உயிர்த்தெழுகிறது

மழைப்பொழுதில் நனைந்த
பறவையொன்று சிறகுலர்த்தலின் பரவசமென
இசையை நிரப்பியிருந்தது

இதழுக்கான காத்திருப்பில்
பருவம் தப்பிப் போக
நிலமிழந்தவர்களின் சோகத்தை
உடுத்தியிருந்தது

படிந்திருக்கும் ஒட்டடைகளுக்குப் புரிவதில்லை
மீட்டப்படாத அதன் இராகங்கள்.

- சிவா விஜயபாரதி

Pin It