பக்கங்கள்...

என் எல்லா
பக்கங்களையும்
நீயே வாசித்திட
வேண்டுமென்று
எண்ணியிருந்தேன்.....

முதலில் ரசித்துப் படித்த நீ
தொடர்ந்த பக்கங்களை
வெறுமே வாசித்தாய் ..
சில பக்கங்களை
கிழித்து எறிந்தாய் ...

நீ கிழித்துப் போட்ட
பக்கங்களால்
கதையின் போக்கு
மாறிய போதும்
தொடர்ந்தேன் ...

இப்போது என்
எழுத்துக்களையே
குறை சொல்கிறாய்...
மீதமிருக்கும் பக்கங்களை
நீ வாசிக்கப் போவதில்லை
என்றான பின்
நான் என்ன செய்வேன்?

எழுத்தை நிறுத்தும்
தைரியம் இல்லை...
தொடர்ந்து
எழுதுகிறேன்
மறையும் மை
ஊற்றிக் கொண்டு....
இனி வரும் பக்கங்கள்
உன் கண்களுக்கு
வெற்றுப் பக்கங்களே!

- அருணா சுப்ரமணியன்

Pin It