வாழ்க்கை கடந்த
வாழ்வுக்குள்
வாழுதல்
கதவடைத்த விசும்பல்...

புழுதி படிந்த
பின் கட்டுக்குள்
பரண் முழுக்க
வள்ளல் மூட்டை...

தெருமுழுக்க பதிந்த
கால்கள் தஞ்சமடையும்
பின் மதிய இளைப்பாறல்
வீட்டுமுற்ற திண்ணை...

சுவற்றுப் பிசுபிசுப்பென
கிழவியாகிக் கிடப்பது
மொத்த வீட்டின்
ஒற்றைச் சாவி...

மச்சு வீடு
என்பது மட்டும் தான்-
இப்போதைக்கு மிஞ்சிய முகவரி...

- கவிஜி

Pin It