வெக்கையான நாளொன்றில்
மின்சாரமற்ற அறையினுள்
சுழலாத மின் விசிறியின்
றெக்கையில் அமர்ந்து
மெல்லிய அதிர்வுடன்
விருட்டென பறந்து
சாளரத்தின் சிறு துவாரம்
வழியே வெளியேறியது
அந்த சிட்டுக்குருவி.
பின்னர் நிலவிய
அமைதியின் கூக்குரல்களில்
வெம்மையாயிருந்த சுவரில்
கோடுகள் ஏதுமற்ற சித்திரங்கள்
ஆடிய நடனத்தில்
உயிர் பெற்றது
நகரத்தின் மூச்சுக் காற்று.

- இ.தாஹிர் பாட்சா, அரும்பாவூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.