ஒற்றைக் கண் சிமிட்டி
இரட்டை புன்னகை செய்தாய்...
மெல்ல கிள்ளி விட்டு
உஷ்ஷ்ஷ் என்று இணுங்கினாய்
கிளிஞ்சல்கள் பொறுக்கும்
மாலை வேலைகளை சிதற
விட்டாய்...
ஆற்றோடு நீர் சொட்டும் சிற்பத்தை
நீயாக்கினாய்...
தின்ன கொடுத்த புளியங்காயில்
இனிப்பு சேர்த்தாய்.....
ஆல மர விழுதை தொங்க விட்டு
தாங்கினாய்...
அய்யனாரை துணைக்கழைத்துக்கொண்டு
விளையாட வந்தாய்...
பனம் பழம் தின்னும் அழகில்
பேய் பசியை பகிர்ந்தாய்...
ஒப்பனை இன்றி அழகாய்
இருக்க முத்தம் வைத்தாய்...
ஆரம்பம் முதலே தெரிந்து
விட்டது
யாவும் கனவென்று...
இருந்தும் எட்டிப் பார்க்க
வைத்தாய்...!

- கவிஜி

Pin It