sky 453

சதுர வீட்டுக்காரனுக்கு
சதுரமாயிருந்தது...
செவ்வக வீட்டுக்காரனுக்கு
செவ்வகமாயிருந்தது...
கூரை வீட்டுக்காரனுக்கு
சரிந்திருந்தது...
அரண்மனைக்காரனுக்கு
வட்டமாயிருந்தது...
அடுக்குமாடிக்காரனுக்கு
ஜன்னலாயிருந்தது...
சாலைவாசிக்காரனுக்குத்தான்
வானமாய் இருந்தது
வானம்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.