open doorவராது வந்த செம்மேகம்
நிழற்படத்துக்கும்
நிறம் தருகிறது
கண்களில்
இன்னொரு வண்ணம்...
---

நீரோடையின் வழியெங்கும்
நீர்த்தடம்
அழிக்கப்படுகிறது...
----

மொழி பெயர்த்த
பார்வைக்குள்
அயல்நாட்டுக்காரியின் காதல்...
---

பகல் நேர வீதியில்
திறந்திருக்கும் நகர வீடு
அச்சமூட்டுகிறது....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.