சாலையோர வேலிக்கருகே
துருத்திக் கொண்டிருந்த
கம்பியொன்றில்
என்றோ நான் பதித்திருந்த
என்
விரல் ரேகை
வளைவுகளின் நடுவே
ஊர்ந்து கொண்டிருந்த
சிறு பூச்சியொன்று,
வேலியோரம்
வளைந்து படர்ந்திருந்த
இலைகளற்ற மரத்தின்
கிளை ஒன்றோடு
ஒட்டிக் கொண்டதோடு
முடிந்து போனது
அந்தக்
கருப்பு வெள்ளைக் காட்சி...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.