பாரினில் இல்லா வருணக் கொடுமையாம்

ஆரியர் புகுத்திய பிறவித் தொழிலில்

மாற்றம் இன்றி வாழ்நிலை தன்னில்

ஏற்றம் மிகுதியாய்த் தரினும் அவரை

நல்லவர் என்று ஏற்க மாட்டோம்

வருண முறையின் கொடுமைகள் ஒழிந்து

நெருடல் இன்றித் திறமையின் வழியில்

தொழிலை அமைப்போர் தந்திடும் நன்மை

சுழியாய் இருப்பினும் அவரே நல்லவர்

என்றே ஏற்போம் இழிவுகள் அகல்வதால்

((திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளிலும், திறமை இருந்தாலும் ஒடுக்கபட்ட மக்கள் கீழ் நிலைகளிலும் வேலை செய்ய வேண்டும் என்று) ஆரியர்கள் புகுத்திய பிறவியிலேயே தொழிலை நிர்ணயிக்கும், உலகில் எங்கும் இல்லாத வருணக் கொடுமையில், மாற்றத்தைக் கொண்டு வராமல், வாழ்நிலையில் ஏற்றம் மிகுதியாகத் தந்தாலும், அவரை நல்லவர்கள் என்று ஏற்க மாட்டோம். வருண முறையின் கொடுமைகளை ஒழித்து, நெருடல் எதவும் இல்லாமல், திறமையின் அடிப்படையில் மட்டுமே (அதாவது திறமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைக்குச் செல்லும் வழிகளில் உள்ள தடைகளைத் தகர்ப்பதும், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியாமல் செய்வதும்) தொழிலை அமைத்திடுமாறு செய்பவர்கள் அளிக்கும் (பொருளியல்) நன்மை ஒன்றுமே இல்லை என்றாலும், (ஒடுக்கப்பட்ட மக்களின்) இழிவுகள் அகல்வதால் அவரையே நல்லவர் என்று ஏற்போம்.)

Pin It