footprintsஎன்
காலடித் தடங்களின்
சுவடுகளைக் கொண்டு
ஒரு உருவம்
தீட்டிக் கொண்டிருக்கிறேன்...
உருவம் நெடுகிலும்
சில புல்லின் நுனிகள்
இன்னும் சில
முட்களின் கீரல்கள் ...
முள் கீரல்களின் மேல்
பூக்களின் மென்மையை வைத்து
மறைத்து விட
முயன்று கொண்டிருக்கிறேன். ..
பூக்களின் நுனிகளில்
பதிந்திருந்த
முட்களின் கீரல்களை
என்ன செய்வதென்றறியாமல்...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.