ஒன்றோடு ஒன்று ஒட்டி

More articles by கிருத்திகா தாஸ்

வளர்ந்திருந்த இரட்டை மரங்கள்
இருந்த இடத்திலொரு வரவேற்பறையும்
கோபுரம் போன்று வளர்ந்து
சேர்ந்திருந்த இன்னுமிரு மரங்கள்
இருந்த இடத்தில் சின்ன படுக்கையறையும்
இன்னும் ஏனைய வளைந்த நிமிர்ந்த
வளர்ந்து கொண்டிருந்த
வளர்த்துக் கொண்டிருந்த
மரங்கள் இருந்த இடங்களில்
சமையலறை கார் பார்க்கிங்
இன்னபிற அறைகள் கட்டி முடித்தபின்
மறக்காமல் ஒவ்வொரு அறையிலும்
அலங்காரச் செடிகள் வாங்கி வைத்துவிட்டேன்..
அழகுக்கென்றும் அதோடு எனக்கு
இயற்கை பிடிக்குமென்பதாலும்...
 
 - கிருத்திகா தாஸ் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.