உழைப்பவர் கற்றவர் அறிவியல் அறிஞர்
பிழையில் தொழிலைச் சுயமாய்ச் செய்வோர்
அனைவரும் மகிழ்வாய் வாழும் முறையாம்
வினைஞர் அரசு வீழ்ந்த பின்னர்
யாரிடம் செல்வார் சுதந்திர வேட்கையோர்
பாரில் என்றால் இழந்தவர் தாமே
ஒற்றுமை யாக இணைந்துப் போரிடல்
வெற்றிக்கு வித்திடும் ஒரேவழி ஆகும்

(உழைக்கும் மக்கள், கற்றவர்கள், விஞ்ஞானிகள், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் சுயமாகத் தொழில் செய்வோர்கள் அனைவரும் மகிழச்சியாக வாழும் முறையான சோஷலிச அமைப்பு வீழ்ந்த பிறகு, இந்த உலகில் சுதந்திர வேட்கை உடையவர்கள் எங்கே போவது என்று ஏங்கினால், அதை இழந்த (உழைக்கும் மக்கள், கற்றவர்கள், விஞ்ஞானிகள், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் சுயமாகத் தொழில் செய்வோர்கள்) அனைவரும் ஒற்றுமையாக இணைந்து (மீண்டும்) போரிடுவது ஒன்றே வெற்றிக்கு வித்திடும் ஒரே வழியாகும்.)

- இராமியா

Pin It