gandhiஎத்தனை முறை வேண்டுமானாலும்
நீங்கள் சுடலாம்.
பகவத் கீதைக்குள்
மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன
உங்கள் துப்பாக்கிகள்
தேவை உங்களுக்கு காந்தியல்ல. . .
கோட்சே மட்டுமே.

வேட்டைக்காரனுக்கு
சிலை வைத்த ஊரில்
கொலைகாரனுக்கும் சிலை.
மறதிகள் மீது கட்டப்படும்
துரோகச் செங்கல்கள்
தூள் தூளாகாவிட்டால்
வரலாறு
நம் முகத்தில் காறி உமிழும்.

மண்ணில் சாயும் முன்
மகாத்மா சொன்னது
கேட்டதா ராமா?
இப்போதாவது சொல்
நீ எந்தப்பக்கம்?

கதர் அணிந்து
காந்தி ஏந்திய தடிக்கும்
காவி அணிந்து
காலிகள் ஏந்திய தடிக்கும்
ஆறு வித்தியாசங்கள் அல்ல
ஆயிரம் வித்தியாசங்கள்

அயோத்தி ராமன் தானே
காந்தியின் நெஞ்சில் இருந்தான்?
பிறகெதற்கு அவனை ஏன்
கோட்சே சுட்டான்?

அகிம்சையை
ஒரு போதும்
துப்பாக்கியால்
கொல்ல முடியாது.

Pin It