பஞ்சமர் சூத்திரர் தமக்குப் பார்ப்பனர்
நெஞ்சறி நீதி செய்யார் எனினும்
அஞ்சிடல் வேண்டாம் ஒற்றுமை வழியில்
விஞ்சும் வலிமையால் பார்ப்பரை வெல்லலாம்
வென்ற பின்னே பார்ப்பனர் தமக்கும்
இன்றவர் மறுக்கும் பங்கைத் தருவர்
ஒடுக்கப் பட்டோர் சான்றோர் ஆதலால்

(தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பார்ப்பனர்கள் (தாங்கள் செய்வது கொடுமை என்று) மனமாரத் தெரிந்து இருந்தாலும் (அக்கொடுமைகளைத் தொடர்வார்களே தவிர) நீதியைச் செய்ய மாட்டார்கள். அதைக் கண்டு (ஒடுக்கப்பட்ட மக்கள்) அஞ்சிடத் தேவையில்லை; ஒற்றுமையாக இருப்பதால் கிடைக்கும் வலிமையால் பார்ப்பனர்களை வெல்ல முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் சான்றோர்கள் ஆதலால் அவர்கள் வென்ற பிறகு, பார்ப்பனர்கள் இப்பொழுது மற்றவர்களுக்கு உரிய பங்கைத் தர மறுப்பது போல் அல்லாமல், பார்ப்பனர்கள் நியாயமாக அடைய வேண்டிய பங்கைத் தருவார்கள்)

- இராமியா

Pin It