night 360முடியவில்லை எனும் போது
முடித்துக் கொள்வதின் தீவிரத்தில்
விழித்திருக்கிறாய் என்னோடு

பளபளக்கும் கத்தி தான்
சிறகு பூட்டி விடுகிறது
கை மணிக்கட்டுக்கு

உறக்கமற்று விழித்திருக்கும் இரவும்
இனியொரு உறவுமில்லையென
வெளிச்சம் தொலைத்த இருளும்
ஒன்றென உணர்ந்து
தாழ் நீக்கி விடுகிறேன்

கொஞ்சம் தூரமே
சிவப்பின் சிறகு
உயரப் பறக்கும் துயரத்தின் பின்
பெரிய வானம்

-ரேவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.