மேலும் ஒரு பெயர்
எனவே பதிவாகி இருக்கிறது
உனது பெயர்....
இன்று நிகழ்ந்த தற்கொலைகளில்.

ஒரு கணப் பொழுதில்-
வடிந்து வெற்றிடமாகி விட்டது...
வானம் மீறிப் பறந்த உன் ஆசைகள்.

தூண்டிலில் சிக்கித் தரையில் விழுந்த
மீன் என நீ.
நிலவைத் துரத்திச் சேர இயலாத
விண்மீனாய் நீ.
இருண்ட குகையில்.
தனித்து நீளும் உன் பயணத்தில்...
உதிர்ந்து...இறந்த உன் வண்ணச் சிறகுகள்.
கரையும் உருவத்தின் விளிம்பில்....
கரையாமல் முகிழ்க்கும் நீர்க் குமிழிகளாய்
உனது ஆசைகள்.

காற்றில்...
கரைந்து...கரைந்து...கலையும்
ஒரு பறவையின் குரலென...
மறையும் உன் ஆசைகளை...

இனி யாரால்-
நிறைவேற்ற இயலும்?

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.