மழைக்குக் குடை பிடித்தால்
குடைக்கு மழை பிடித்துவிடுகிறது...
விரிந்த குடை மடங்க மறுக்கையில்...
காதலர்கள் குடை பிடித்துக்கொண்டாலும்
காதல்கள் மட்டும் எப்போதும் நனைந்தபடியே...
நடக்கச்சொல்லி காலைப் பிடித்தாலும்
இடுப்பில் தூக்கிப்போகச் சொல்லி
வாசலில் நின்றழும்
இளைய பிள்ளை குடை...
மலட்டு வானம் மேகமாய் பூக்கையில்
பூப்புநீராட்டுவிழா மழை...
மண்வாசத்தின் நெடு நாள் உறக்கத்தை
நீரூற்றிக் கலைக்கிறது மேகம்
மின்னல் கண்சிமிட்டலுடனும்,
கேலியிடிச்சிரிப்புடனும்...
- ராம்ப்ரசாத், சென்னை (
மழைக் குறிப்புகள்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
More articles by ராம்ப்ரசாத்
- PK - திரைப்பட விமர்சனம் (05 ஜன 2015)
- மிஷ்கினின் 'பிசாசு' - விமர்சனம் (24 டிச 2014)
- Interstellar - திரைப்பட விமர்சனம் (21 நவ 2014)
- ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? (28 ஏப் 2014)
- ராதா (27 மார் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.