மௌனத்தை உழுதபடி

முன்னகர்கின்றன கவலைகள்

நுகத்தடியில்

புரள்கிறது ஒரு பேரமைதி

 

கருத்துத் திரளும்

நம்பிக்கை மேகங்கள்

பொழியவிருக்கும் பெரு மழையின்

முதல் துளி போல

 

உன் வருகை அமைந்துவிடாதா

எனக் காத்துக் கிடக்கின்றன

கட்டுக் கட்டாய்

என்

எதிர்பார்ப்புகள்

 

வெடிப்பு விட்டு

நீண்டுக் கிடக்கும் நம் வரப்புகளை

அளந்தபடியே முணுமுணுக்கிறது.

இந்த அகால இரவு!

 

- இளங்கோ

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.