என் பாட்டியின் ஜீன்ஸ்
நிறமிழந்து நிறமிழந்து
கொள்ளை அழகு
கூடிவிட்டது

என் அம்மாவின் ஜீன்ஸ்
என்னால் தான்
போட்டுக்கிழிக்கப்பட்டது,
டிஸ்ற்றெஸ்டு ஜீன்ஸ்
அருமை என எனது
தோழிகள் கொண்டாடுகின்றனர்.

சோழமன்னரின் அந்தப்புர
அழகிகளும் அதே ப்ராண்டு
ஜீன்ஸையே அணிந்து வந்தது
சமணர் இடுகைகளில்
காணக்கிடைக்கிறது.

என் மகளும் அதே
பாரம்பரிய ஜீன்ஸைத்தான்
விரும்புகிறாள்.

தொட்டுத்தொடரும் ஒரு
ஜீன்ஸ் பாரம்பரியம்.

-  சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.