கதை கேட்பதற்காக
கூடியிருந்தார்கள்
குழந்தைகள்
எல்லா கதைகளுக்குள்ளும்
நுழைந்து பார்த்தார்கள்
எல்லா கதைகளையும்
ரசித்துக் கேட்டார்கள்
கதையில் வந்த
செல்லப் பிராணிகளிடம்
விளையாடிக் கழித்தார்கள்
கருத்து எதுவும்
சொல்லாத கதைகளே
அவர்களுக்குப் பிடித்திருந்தது
கதைகளுக்குள்ளும் கதை
ஒளிந்திருப்பதை
கண்டுபிடித்துக் காட்டினார்கள்
நீரூற்று போல்
உற்சாக வெள்ளம் பீறிட்டது
கதைகளின் முடிவில்
பெருத்த ஆரவாரங்களுக்கிடையே
ஆகாஷ் அம்மா இறந்துட்டாங்களாம்
அதான் அவன் வரலையென்று
ஆசிரியரிடம்
சொல்லித் தொலைத்தார்கள்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.