வேட்டிசேலை
இலவசம்!


தொலைகாட்சிபெட்டி
இலவசம்!


கிரைண்டர் மிக்சி
இலவசம்!


கேஸ் அடுப்பு
இலவசம்!


பொங்கி திங்க
புழுங்கலரிசி
இலவசம்!


வித விதமாய்
இலவசம்!


பின்வாசல் கொல்லையில்
நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு
மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக
நமக்காக இலவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம்
மறைமுகமாய்
இலவசம்....!

Comments

1 comment

1
அ.தமிழ்ச்செல்வன்
என் தமிழ் சமுகத்தை அழித்துக் கொண்டிருக்கிற வார்த்தை இலவசம்- குன்றக்குடி அடிகளார் சொன்னாதாக ஞாபகம்.இலவசத்தை நம்பி ஜனநாயகத்தை அழித்துக்கொணடிருக்கிறது தமிழ் சமுகம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.