ஓரறையிலிருந்து இன்னோர் அறைக்கோ
உட்புறச்சுவர்களின் இணைப்புகளிலோ
கழிப்பறையின் குட்டிச்சுவர்களிலோ
திடீரெனத் தோன்றித் தம் பயத்தை
இடம்பெயர்த்து
விடைக்கும் கண்களுடன்
இருளைச் சாடும் நீளவெட்டையும்
ஒளியைக் கொண்டாடும்
குறுக்கு வெட்டையும்
பாதைகளாக அறிவித்தபடி
பிறரறியாது
பசையீர்ப்பு நடனமொன்றைப்
பரிசளித்துக்கொள்கின்றன
பெரிய மரப்பல்லிகள்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.