கதவை தாழிடாதீர்கள்
நான் எப்போது
வேண்டுமானாலும் வரலாம்
என்னைப் பற்றி
புறம் பேசாதீர்கள்
எவர் வாயிலாவது
அதை நான்
கேட்க நேரலாம்
தயவுசெய்து
அழைப்பு மணியை
அழுத்தாதீர்கள்
அது என் தனிமையை
கெடுக்கலாம்
கைபேசியில் பேசிக்கொண்டே
என்னிடம் அளாவளாவாதீர்கள்
நான் சொல்ல வந்த
விஷயத்தை மறந்து போகலாம்
உங்கள் வானொலியின்
ஒலி அளவை குறைத்தே
வையுங்கள்
அது என் செவிப்புலனை
அடைக்கிறது
ரகசியத்தை என்னிடம்
பகிர்ந்து கொள்ளாதீர்கள்
அப்புறம் அது
ரகசியமாக இருக்காது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.