தேநீர்க் கோப்பையில்Love

நிரம்பிக்கிடக்கிறது

காதல்

சுவைத்துத் தீர்க்கிறோம்

நீயும் நானும்

நிரப்பிக் கொண்டேயிருக்கிறது

காலம்

00

உன் பிரவேசத்தின்

கணங்கள் உமிழும்

அனற்கங்குகள்

பிண்டமாக்கிவிடுகின்றன

என்னுடலை

பிய்த்துத் தின்கின்றன

கனவுகள்

00

உலகமொத்தத் திமிர்

உனக்கு - அது

உண்டாக்கிச் சென்றது

காதல்

எனக்குள்

00

இன்னுமொருமுறை

திரும்பிப்பார்த்து

குற்றுயிராய்க் கிடக்குமென்னைக்

கொலை செய்துவிடு

பார்வையில் தொடங்கி

பார்வையில் முடியட்டும்

காதல்

நாவிஷ் செந்தில்குமார்

Pin It