வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜூவியில் செய்தி வந்துள்ளதே. இதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? - மைக்கேல் ராஜ், திருச்செந்தூர்

தமிழீழச் சிக்கலிலும் தமிழகப் பிரச்சினை களிலும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகச் செயல் பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்குத் தக்க பாடம் கற் பிக்கவேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றோ கொள்கை மாற்றம் ஏற்படும் என்றோ எந்த மயக்கமும் எனக்கில்லை. காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே குறியாக உள்ளதால் மற்ற கட்சிகள் எல்லாம் மிகச் சரியானவை என்று நான் கருதுவதாகவும் பொருள் இல்லை. காங்கிரசுக்குத் துணை போன அனைத்துக் கட்சிகளும் கடுமையான விமரிசனத்திற்கு உரியவை. என்றாலும் காங்கிரஸ், தமிழக அரசியல் கட்சிகளைத் தனக்கு ஏவல் செய்யும் கட்சிகளாக மாற்றி அச்சுறுத்தியும் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் தொடர்ந்து தமிழகத் துக்கும் தமிழர் களுக்கும் துரோகம் செய்து வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட தமிழக மக்கள் ஓரணியில் திரளவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும். இதை உணர்ந்தாவது பிற கட்சிகள் தமி ழினத்திற்கு துரோகம் செய்யாமல் தமிழக நலன் களுக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக நலன்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்

2. கருணாநிதி இந்தியா முழுவதும் தன் பேரன் பேத்திகளை எல்லாம் அனுப்பி திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவேன் என்கிறாரே? - கனகராசு, உடுமலைப் பேட்டை

இதை எங்கே போய் சொல்லுவது? எந்த சுவரில் முட்டிக் கொள்வது என்பதுதான் தெரியவில்லை.

பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார், “மத்திய அரசின் தணிக்கை துறை தடையில்£மல் நான்கு திரைப்படம் எடுக்க அனுமதித்தால் திராவிட நாட்டை பெற்றுக் காட்டுவேன்” என்று சூளுரைத்தார்.

என்ன ஆயிற்று? அண்ணாவை இதயத்தில் வைத்தவர், சின்னத்திரையில் சின்னதாய் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்திரன் திரைப்பட வெட்டுருவில் பால் அபிஷேகம் நடத்து வதையும் சூடம் கொளுத்துவதையும் கருத்து ஏதும் சொல்லாமல் கண்டு களிக்கிறார். நாற்பது ஆண்டு களுக்கு மேலாக ஆட்சியில் இருந்து தமிழர்களுக்கு என்ன நன்மை? தமிழகத்தில் என்ன நிலைமை? பகுத்தறிவு கொள்கை காற்றில் பறந்ததேன்? ஊடகம் அனைத்தும் உங்கள் கைகளில் அதன் மூலம் பகுத்தறிவைப் பரப்ப வேண்டியதுதானே. ஒருபுறம் பகுத் தறிவு பேசுவது, மறுபுறம் சத்யசாயிபாபாவை வீட் டிற்குள் அழைத்து வந்து வீட்டிலுள்ளவர்களை ஆசிர் வாதம் பெற வைப்பது. அரியூர் கோயிலைச் சுற்றி பார்ப்பது. தஞ்சை கோயிலுக்குள் புறவாசல் வழியே செல்வது. வாஸ்து சரியில்லையா? இல்லை தெய்வக் குத்தம் வந்துவிடுமா? திராவிடக் கொள்கையே பகுத்தறிவு பேசுவதுதானே. எங்கிருந்து வந்தது இரண்டு பார்வை.

இவ்வளவும் செய்துவிட்டு திராவிடன் என்று எங்களை மட்டும் சொல்ல வைக்கிற முயற்சி ஏன்? கருநாடகம், ஆந்திரா, கேரளா எங்கேனும் எவரேனும் இதைப் பேசுகிறார்களா? அப்புறம் தமிழனுக்கு மட்டும் என்ன வாழ்கிறது திராவிடம். தமிழனை தமிழ் பேசவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தொலைக் காட்சிகளில் தமிழைப் பிச்சி பிச்சி போடுகிறார்கள் பேரன்கள். கையில் இருக்கிற ஊடகங்களை வைத்து தமிழ் நாட்டிலேயே பகுத்தறிவைப் பரப்பாத இவர்கள்தான் இந்தியாவெங்கும் கொள்கை முரசு கொட்டப் போகிறார்களா?

திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லையே இவர்கள் ‘குவார்ட்டர் கட்டிங்’ போன்ற திரைப்படங்களை உருவாக்குவது யார்? இதுதான் திராவிடக் கொள்கையா? போச்சு. எல்லாம் போச்சு, இளிச்சவாய்த் தமிழன் இருக்கும் வரை அல்லது இறக்கும் வரை இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

Pin It