அறுவடைக்கான
முதல் எதிர்பார்ப்பில்
இருவரும் இருந்தார்கள்

புறவெளியைத்தீண்டிய
முழுத்திருப்தியில்
முதல் அனுபவச்சிறகுகள்
இருவரின் பார்வைகளை
சாதுர்யமாக மறைக்கிறது

விடியலின் வியர்வைக்குளுமையில்
காத்திருக்கிறது
நெடிய வெம்மைக்காலங்களின்
மௌனக்கழிப்பு

இரத்த நாளங்களின்
உயிர்தெறிப்பினை
ரகசியமாய் மறைத்து
மீண்டும் எதிர்பார்க்க
விடியலை மறுக்கும்
ஊடலின் உச்சத்தில்
முத்தத்தின் ரசிப்பான
நெடிய ஈரப்பதிவுகளாக
உருவாகிக்கொண்டிருக்கிறது
மீண்டும் ஒரு ஏடன் தோட்டம்

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.