செம்பருத்தி சூடி
தெருவில் நடந்தாய்
செடிகளிலிருந்து
உதிரத் தொடங்கின‌
ரோஜாக்களும் மல்லிகையும்

***

காதுகுடைந்து
நீ எறிந்த
கோழியின் இறகை
ஏக்கத்தோடு பார்த்தது
தோகை மயில்

***

மழை வருமென்ற‌
வானிலை தெரிந்தும்
குடையின்றி வருகிறேன்
தெரியுமெனக்கு
சின்ன குடையோடு
வருவாய் நீ.

****

உன் நினைவுகளுக்கு
இடம் தராத மழை
மழையா என்ன?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.