காகிதங்கள் அதில்

கொஞ்சம் எழுத்துகள்

ராமபாணங்கள்
இன்ன பிற ஆட்கள்
ஆங்காங்கே
‘அமைதி காக்கவும்’
பலகைகள்
கதிரைகளின் கிறீச் சத்தம்
அவ்வப்போது பதியும்
சப்பாத்துகளின் ஒலி
எப்போதாவது சத்தம்
எழுப்பும் மின்விசிறி
இவையாவும் இல்லை
இணைய நூலகத்தில்.

ஸீசர் பிறந்தான்(?)

நல்ல நேரம் பார்த்து
நட்சத்திரம் அறிந்து
ராகுகாலம் நீக்கி
எமகண்டம் தவிர்த்து
அஷ்டமி,நவமி போக்கி
அமாவாசை விலக்கி
பிறந்தான்(?) ஸீசர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.