labour lawமரணத்தின் காலடித் தடம் வீதி எங்கும் அழுத்தமாகப் பதிந்துக் கிடக்கின்றது. ஒன்றன் பின் ஒன்றாய் மக்கள் அதை கடந்து போக முயற்சிக்கின்றார்கள். ஆனால் சிலரின் கால்தடம் மிக சரியாக மரணத்தின் கால்தடத்துடன் பொருந்திப் போகின்றது. சிலரின் கால்தடத்திற்கு ஏற்றவாறு மரணத்தின் கால் தடங்கள் தன்னை உருமாற்றியும் கொள்கின்றது.

யாரும் இங்கே தப்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது. இப்போது தெரியாதது எல்லாம் தாங்கள் எந்த அலையில் அடித்துச் செல்லப்படுவோம் என்பதுதான்.

குடும்பமாக, நண்பர்களாக, உற்றார் உறவினர்களாக ஒன்றாக அமர்ந்து தத்துவ விசாரணை செய்து கொண்டு இருக்கின்றார்கள். யாருக்கு முன் யார் என்று.

ஒரு கண்ணியமான மரணம், ஒரு கண்ணியமான நல்லடக்கம் தங்களுக்கு கிடைக்குமா என்பதையும் தன் மனைவியின், கணவனின், மகளின், மகனின், அம்மாவின், அப்பாவின், நண்பனின் முகத்தை கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதையும், அவர்களின் ஒரு சொட்டு கண்ணீர் கூட தங்கள் மேல் படாமல் தங்களின் உடல் இரக்கமற்று எரியூட்டப்படுமா என்றும் கடவுளின் வழி தெரியாத பாதையை நோக்கி தங்களின் குமுறலை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

நேற்று எங்கோ நின்று கொண்டிருந்ததாய் யாரோ சொல்லக் கேள்விப்பட்ட மரணம் இன்று அருகில் மிக அருகில் உரசிச் சென்றதை உணரும் போது நரகத்தின் துணை நரகமாக இந்த நாடு மாறிக் கொண்டிருப்பதை மிரட்சியுடன் உணர முடிகின்றது.

அமைச்சர்கள் அங்கே அதை புரட்டிப் போட்டார்கள், இங்கே இதை நிமிர்த்தி வைத்தார்கள், கள ஆய்வு செய்தார்கள், கட்டளை பிறப்பித்தார்கள், கண்டிப்பு காட்டினார்கள், சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள், பேருந்து பிடித்து கொடுத்தார்கள்…

அரசு அமைந்தவுடன் முதல் நூறு நாட்கள் ஹினிமூன் பிரியாட் என்றார்கள். அதன் உண்மையான பொருள் நமக்கு இப்போதுதான் தெரிகின்றது.

கொரோனோ தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. அந்த இடத்தை தொடர்ந்து தமிழகம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே இந்த அரசு இயங்கியும் வருகின்றது.

மரண ஓலமும், பிணங்களின் மனமும் இந்த அரசுக்கு இன்னும் உத்வேகத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் கார்ப்ரேட் ஆலைகள் 100 சதவீதப் பணியாளர்களுடன் முழு உற்பத்தியை எடுத்து வருகின்றன. தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடாமல் இப்படி கார்ப்ரேட் கம்பெனிகளின் லாபத்தை உறுதி செய்வதற்காக உழைத்து சாக நிர்பந்திப்பது எப்படி ஒரு யோக்கியமான அரசின் செயலாக இருக்க முடியும்?.

இதுவரை தமிழக அரசு கார்ப்ரேட் கம்பெனிகள் கொரோனோ தொற்றுக் காலத்தில் அதுவும் நிலைமை கைமீறிப் போய்விட்ட இந்த காலத்தில் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றிய எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடவில்லை.

அதற்கு பதிலாக தொழிலாளர்களின் தாலி அறுக்க தாங்கள் கொடுத்த அனுமதிக்குப் பிரதிபலனாக அதுபோன்ற தொழிற்சாலைகளிடம் இருந்து கொரோனோ நிவராண நிதியை அரசு பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஒருபக்கம் திமுக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளை இயங்க அனுமதி கொடுத்து விட்டு தொமுச மூலமாக ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு கொடுக்குமாறு வெட்கமே இல்லாமல் முரசொலியில் செய்தி வெளியிடுகின்றது. இதன் மூலம் இரண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்க முயற்சிக்கின்றது.

உண்மையை சொல்லப் போனால் எந்த தனியார் தொழிற்சாலைகளும் தங்கள் ஊழியர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வது கிடையாது.

தங்களுக்கு உழைத்த தொழிலாளர்களின் மருத்துவச் செலவையே ஏற்றுக் கொள்ளாத கார்ப்ரேட்கள் தொழிலாளர்களின் குடும்பத்தை மயிரளவுக்கு கூட கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அப்படி என்றால் தொழிலாளர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

ஆலைகளை நடத்த அனுமதி கொடுத்த அரசின் பொறுப்பா? இல்லை நீ செத்தாலும் பரவாயில்லை என்னுடைய தொழிற்சாலையில் வந்து வேலை செய் என்று அடாவடித்தனம் செய்யும் இரக்கமற்ற முதலாளிகளின் பொறுப்பா?

பொறுப்பேற்றுக் கொள்ளவோ, பொறுப்பாக பதில் சொல்லவோ யாருமே இல்லை. ஆடு திருடிய கள்வனைப் போன்றே ஒட்டு மொத்த அரசும் நடந்து கொண்டிருக்கின்றது.

பொது முடக்கம் என்ற பெயரில் சாமானிய மக்களின் வாழ்க்கை முடக்கி விட்டு பல தலை முறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் கும்பல்களை கொட்டம் அடிக்க இந்த அரசு விட்டிருக்கின்றது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் பெரிய தோல்வியை தழுவிக் கொண்டிருப்பதற்கு இந்த அரசின் கார்ப்ரேட் அடிமைத்தனம் தான் முதன்மையான காரணமாகும்.

கடந்த ஞாயிறு அன்று எம்.ஆர்எஃப் ஆலையில் இரு தொழிலாளர்கள் பரணீதரன் மற்றும் கோதண்டபாணி ஆகியோர் இருவரும் கோவிட் பாதிப்பால் இறந்துள்ளனர்.

எம்.ஆர்.எஃப் ஆலையில் ஏற்கனவே முதல் அலையில் தொற்று அதிகமாகி பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலையிலும் ஏறத்தாழ 70-80 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. 35 வயதான பரணீதரன் இறந்த போது அவரது மனைவி கோவிட் நோய்வாய்ப்பட்டுள்ளார். இவருக்கு 2 சிறு குழந்தைகள் உள்ளனர்.

மே 10 அன்று போர்ட் ஆலையில் இளம் தொழிலாளர் தெய்வசிகாமணி நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். போர்ட் நிறுவனத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தவிர Seoyon_e_wha என்ற ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு ஆலையில் தொழிலாளர் அந்தோணிராஜ் என்பவரும் SHG எனும் ஆலையில் ஒரு தொழிலாளரும் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

50 சதவீதத் தொழிலாளர்களுடன் ஆலையை நடத்த வேண்டும் என்று MRF தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மே 9 அன்று இரு தொழிலாளர்கள் இறந்ததை அடுத்து இந்த ஆலையில் உற்பத்தி முடங்கியுள்ளது.

சிஎம் செல்லிற்கு அனைத்து தொழிலாளர்களும் மனு அனுப்பும் போராட்டத்தை Ford தொழிலாளர்கள் கையில் எடுத்துள்ளனர்” (நன்றி: தொழிலாளர் கூடம்)

இவை எல்லாம் வெளி உலகிற்கு தெரிந்தவை. இன்னும் தெரியாமல் பல லட்சம் தொழிலாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கார்ப்ரேட்டுகளின் குண்டி கொழுக்க வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

பொதுவாகவே கார்ப்ரேட் கட்சிகள் பிணங்களை தின்னும் பிணந்தின்னிகள் என்பது வரலாறு முழுவதும் நிரூபிக்கப்பட்டவை. அவை பேசும் சமூக நீதி மயிறு மன்னாங்கட்டிகள் எல்லாம் முதலாளிகளின் மயிரைக் கூட அசைத்துப் பார்க்க துப்பில்லாத உதார்கள் ஆகும்.

தொழிலாளர்களை நோய் தொற்றுக்கு தெரிந்தே பலிகொடுக்க துணியும் அயோக்கியர்கள் சமூக நீதி பற்றியும் சமூக சமத்துவம் பற்றியும் பேசுவது கேலிக் கூத்தானது.

அதனால் என்ன? நாம் சொம்படிப்போம். நக்கிப்பிழைக்கவே இயக்கங்களை நடத்தும் கூத்தாடிகளுக்கு எவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன? நாம் தினம் காலை விடிந்ததில் இருந்து இரவு முடியும் வரை விதவிதமாக சொம்படிப்போம். ஆனாலும் நம்மை தொழிலாளர்களின் தோழனாக காட்டிக்கொள்ள அரிதாரத்தை அமர்க்களமாக பூசிக்கொள்வோம்.

தொழிலாளர்களின் உயிரைப் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவலையற்ற, வர்க்கப் பார்வையற்ற அரசியல் இயக்கங்களில் இருப்பதற்கும் பன்றி தொழுவங்களில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

இன்று எந்தவித வர்க்கப் பார்வையுமற்று ஆளும் கட்சியை தாஜா செய்து பிழைக்கும் பிழைப்புவாதக் கும்பலே சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது.

அவர்கள் கொத்துக்கொத்தாக சாகும் தொழிலாளர்களின் பிணங்களுக்கு சுயமரியாதை அத்தர்களை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழகத்தின் கொரோனோ தொற்று நேற்று 34,875 ஆக பதிவாகி உள்ளது. 365 பேர் பலியாகி இருக்கின்றார்கள். இதுவரை 18,734 பேர் இறந்திருக்கின்றார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் தொடர்ச்சியாக தொற்று விகிதமும் மரண எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அப்படி என்றால் அரசு தற்போது அறிவித்துள்ள பொது முடக்கம் எந்தப் பலனையும் தரவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகின்றன.

தேநீர் கடைகளாலும், சாலையோர நடைபாதை கடைகளாலும்தான் கொரோனோ பரவுகின்றது என்ற அரசின் குற்றச்சாட்டு தற்போது பொய்யாகி இருக்கின்றது.

கார்ப்ரேட் கம்பெனிகளை இயக்கவும், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி கொடுத்துவிட்டு பொதுப்போக்குவரத்து மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து தடை இன்றி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

மானமுள்ள ஒரு அரசிடம் உண்மையை சொல்லி புரியவைக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் மானமுள்ள அரசு உண்மை நிலையை உணர்ந்து செயல்படும். ஆனால் கார்ப்ரேட்களின் அடிமைகளாக வாழ்வதையும் தொழிலாளர்களின் தாலி அறுப்பதையும் தங்களின் கொள்கையாக கொண்ட ஒரு அரசிடம் எது பேசியும் எதுவும் ஆகப் போவதில்லை.

ஸ்டாலின் தான் வந்தாரு… எல்லோரையும் சுடுகாட்டுக்கு அனுப்பத்தான் போராரு…

- செ.கார்கி

Pin It