அண்ணன் சேதுபதி ஆன்லென் கடை 'ஆப்பை' டவுன்லோடு செய்து போனையே பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும், அனைத்தும் நல்லபடியா நடத்துவிடும் என்னு பச்சை சொக்கா போட்டு சிரிக்கிறார்....!

அவருக்கு எங்க தெரியப் போகுது 'Digital India'வின் வெட்டிப் பெருமைகளும், மக்களின் கழுத்தில் சுருக்குக் கயிறை மாட்டிவிட்டு அன்ட்ராயர் பணத்தையும் வரியென்ற பெயரில் அரசு ஆட்டையைப் போடுவது...

நாட்டில், "கக்கூஸ், வங்கிக் கணக்கு" இருந்தாலே மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

modi with saudi kingநாட்டை இந்து தேசம் எனப் பிரகடனம் செய்து கொண்டு, சவுதி பாய் கிட்ட 32ம் தெரிய கடன் கேட்டு நிற்கிறார்...

வாங்கின கடனுக்கு வட்டி கட்ட RBI-ன் இருப்பு பணத்தையும், தங்கத்தையும் காவு கொடுக்கிறார்...

நாளை மீண்டும் நம்மிடம் வருவார், மிச்சத்தையும் புடுங்க...

வங்கி மூலமே அனைத்து பணப்பரிமாற்றமும் நடக்கனும் என்றார். இருப்பு தெரிஞ்சுக்க வங்கிக்கு வரவேண்டாம் SMS வந்துடும் என்று அதற்கும் ₹29.49/- சேவைக்கட்டணம்..

அனைவருக்கும் அக்கவுண்ட் மூலமாவே பணத்தைப் போடுங்க என்ற மனுசன், அப்படி பணத்தைப் போட்டதிற்கும் ஒரு லட்சத்திற்கு 210 ரூபாய் சேவைக் கட்டணம்... 3.5 லட்சத்திற்கு 723.88/-புடுங்கினார்... அப்படி என்னதான் சேவையோ!

செக் கொடுக்காம, பேங்க் போகாம மொபைல் போனிலேயே வீட்டில் இருந்தபடியே அடுத்தவருக்கு பணத்தை அனுப்பலாம் என்று சொன்னாரு அந்த மண்ணாரு... நானும் நம்பி அனுப்பினேன். OTP வந்ததை சரியாப் பதிந்ததும் பணம் என் அக்கவுண்டில் அவுட்.

ஆனா பாவம் அந்த நபருக்கு 12 மணி நேரமாகியும் பணம் அக்கவுண்டுக்கு போனபாடில்லை... தீபாவளி செலவுக்கும் தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பணம் 1.5 லட்சம் இப்படி கம்யூட்டரில் தூக்கு மாட்டி தொங்குதேன்னு நானும், அந்தத் தொழிலாளியும் வங்கி அதிகாரிகிட்ட கேட்டா... அவரு பதட்டமே இல்லாம 'அலிபாபாவும் 40 திருடன்களும்' கதை சொல்வது போல கேட்டுவிட்டு, "நான் ஒன்னும் பண்ணமுடியாது சார்... நெட் ப்பிராபளம். உங்களுக்கோ அல்லது அவருக்கோ 48 மணி நேரத்தில் பணம் அக்கவுண்டில் ஏறிடும்" என்றார்...

"சார் ப்பிளிஸ் சார்... ஏதாவது பண்ணுங்க. நாளைக்கு தீபாவளி. ஆளுங்களுக்கு பணம் கொடுக்கனும். பேங்கும் லீவு" என்று கெஞ்சியும் ஒரு ஐகோர்ட்டும் ஆகலை...

நாசமாப் போங்கடான்னு வந்து வட்டிக்கு ₹1Lக்கு 10 K கொடுக்க ஒத்துக் கொண்டு 90 K-வை வாங்கி, கொடுக்க வேண்டியவங்களுக்கு பாதிப் பாதி மட்டும் கொடுத்து அனுப்பினோம்..

அந்தக் கடுப்பில் இருக்கும் போது பேப்பரில் ஒருத்தர் வறுமையை டீ கிளாஸில் பார்த்திருக்கிறேன்னும், புத்தகத்தில் படிக்கவில்லைன்னும் பெனாத்துறாரு...

அந்த ஆபிஸர் சொன்னது போல 48 மணி நேரத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தது.

அவ்வளாவு தானா இந்த வங்கி அக்கப்போர்..?

மாதம் பொறந்ததும் அதுவுமா மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்று திரும்ப 150.09 /-புடிங்கிட்டானுக...

எதிர்காலத்திற்கு உதவுமுங்க... மாதம் மாதம் ஒரு ரெண்டாயிரம் சேமிங்க. உங்களுக்கு உதவியா இருக்கும் அதற்கென்று நீங்க தனியா பணம் போடவேண்டாம். உங்க அக்கவுண்டில் இருக்கும் போது நாங்களே வரவு வச்சுக்கிடுவோம்னு நயவஞ்சகமா பேசி சிக்க வைத்தார்கள்....

அந்த ரெண்டாயிரம் இல்லாத மாதத்தில் 187.91/- கணக்கிலிருந்து அபேஸ் பண்ணுறானுக...

இப்படி Digital Indiaவுல இவனுகளோட அலம்பல் தாங்க முடியாம, நமக்கு வரும் கோவத்துக்கு அப்படியே தூக்கிப் போட்டு அதி நவீன ரிக் வண்டியால பாறையைக் கொடையுறது மாதிரி கொடஞ்சிடலாமான்னு தோனுது...

என்ன பண்ண... கேடியும் கிரிமினல்களும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் புடை சூழ திரியுறான்கள்... காத்திருப்போம் மாட்டாமலா போய்யுடுவான்கள்...

அட்டப்பாடி காட்டுக்குள் சுட்ட துப்பாக்கிகள் திசை மாறி சுடாமலா போகும்..? நிச்சயம் சுடும் கீழ் வெண்மணி சம்பவம் போல்...

- தருமர், திருப்பூர்

Pin It