‘பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்க்கின்றார்கள் என்றால், அந்தப் பத்துப்பேர் பலசாலியா அல்லது அவர்கள் எதிர்க்கும் ஒருவர் பலசாலியா’ என்று தனது மண்டையில் இருக்கும் நாலு மயிரும் உதிர்ந்து போகும் அளவுக்கு சிந்தித்து ஒரு பெரும் சிந்தனையை சமீபத்தில் ரஜினி தாத்தா வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘சமூக விரோதிகள்’ தாத்தா பெயருக்கு அன்று நாள் முழுவதும் பயங்கரமான அர்ச்சனைகள் செய்தார்கள். ஆனால் என்னதான் அர்ச்சனைகள் செய்தாலும், தாத்தா தன்னை ஒருபோதும் மாற்றிக்கொள்ள முயற்சிப்பதில்லை. காரணம் ரஜினி தாத்தா தன்னுடைய மண்டையில் இருப்பதுதான் வெளி உலகில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். அதனால் வெளி உலகில் உள்ள எதுவும் அந்த மரமண்டையில் செல்ல முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கின்றது. அதனால் தாத்தா வெளி உலகைப் பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அது அபத்தத்தில் போய் முடிந்து விடுகின்றது.

rajini and modiதான் வாழும் காலத்தின் புறச்சூழ்நிலையை யார் சரியாக மதிப்பிடுகின்றார்களோ, எந்த தத்துவம் அதை மாற்றி அமைக்க வழி சொல்கின்றதோ, அந்தத் தலைவரையும் , தத்துவத்தையும்தான் மக்கள் தம்முடையதாக வரிந்து கொள்வார்கள். ஆனால் சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அதற்கு எதிராக செயல்படுபவர்களையும், இருக்கும் சமூக அமைப்பை அப்படியே கட்டிக் காப்பாற்ற வழி சொல்லும் தத்துவத்தையும் மக்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிடுவார்கள். இதை நாம் வரலாறு முழுவதும் பார்க்கின்றோம். சாமானிய மக்களோடு மக்களாக வாழ்ந்து, தன்னை அந்த மக்களின் நிலைக்கு சிந்தனை ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் யார் தாழ்த்திக் கொள்கின்றார்களோ அவர்களால் மட்டுமே அந்த சாமானிய மக்களை வென்றெடுத்து, அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும். அந்த வகையில் சாமானிய மக்களின் வாழ்க்கையை உணர்வு ப்பூர்வமாகவும், நிரந்தர தீர்வுடனும் அணுகும் கொள்கை கொண்ட ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆகும். திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் இன்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் பல சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதே ஆகும். அவர்கள் செயல்படுத்திய பல திட்டங்களால் சாமானிய மக்களிடம் வறுமையின் தீவிரம் மட்டுப்படுத்தப்பட்டு குறைந்த பட்சம் தமிழகத்தில் பட்டிணிச் சாவுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆனால் இந்தக் கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனியத்தை தீவிரமாக அமுல்படுத்துவதை மட்டுமே தனது கொள்கையாகக் கொண்டு செயல்படும் பிஜேபி, சாமானிய மக்களின் புறவுலகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அதற்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் படு தோல்வி அடைந்திருக்கின்றது. அதற்குக் காரணம் அப்படியான எந்த சிந்தனையும் அவர்களுக்கு இல்லாததே ஆகும். அடிப்படையிலேயே மக்களின் பொருளியல் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது கருத்து முதல்வாதத்திற்கு எதிரானது ஆகும். கருத்து முதல்வாதத்தின் அடித்தளமே வறுமையின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் பழைய தேங்கிய கலாச்சார வாழ்க்கையை மீட்டெடுத்து, இந்த மக்களை சனாதன அடிப்படையில் வாழ கற்றுக்கொடுப்பதை மட்டுமே ஒரே செயல்திட்டமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கும்பல்களுக்கு ஒருபோதும் சாமானிய மக்களின் நிகழ்கால புறத்தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல செயல்பட முடியாது.

அப்படி இருந்தும் கருத்து முதல்வாதத்திற்கு எதிரான புறச்சூழ்நிலை இங்கே மிக பலவீனமாகவே உள்ளது. இதை முற்போக்கு சக்திகள் நன்றாக உணர்ந்துள்ளார்களோ இல்லையோ, பிற்போக்கு சக்திகள் மிகத் துல்லியமாக உணர்ந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் மிக எளிதாக அவர்களால் மக்களை ஏமாற்ற முடிகின்றது. வதந்திகளையும், விளம்பரங்களையும் உற்பத்தி செய்து, சாமானிய மக்களை நம்பவைத்து, அவர்களின் வாழ்க்கையையே சூறையாட முடிகின்றது. பிற்போக்குத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் இதனால் எளிதில் ஏமாற்றப்பட்டு, அயோக்கியர்களைத் தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள். பின்னால் தாங்கள் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி வருந்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இன்று நாட்டு மக்கள் அப்படித்தான் அழுது புலம்பி அரற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஓட்டு மொத்த நாடே தினம் தினம் மண்ணைவாரித் தூற்றி, மோடிக்கு சாபம் விட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒருவருக்கு துணிந்து ரஜினி சொம்பு தூக்குகின்றார் என்றால் நிச்சயம் ‘சிட்டியின்’ மூளையில் ஆர்.எஸ்.எஸ் அதன் மலத்தை வைத்து புரோகிராமிங் செய்து, மீண்டும் அழிவு வேலைகளுக்கு அதைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி கொலைகாரர் என்பதும், மேனா மினுக்கி என்பதும் தெரியாத ‘முட்டாள் அல்ல’ ரஜினி. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் அநாதையாக மாற்றப்பட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் இங்கே காலூன்ற வேண்டும் என்றால், இந்த மண்ணில் ஆலமரமாக வீற்றிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு சிந்தனையை ஒழித்துக் கட்ட வேண்டும். ஆனால் கருத்தியல் தளத்தில் மோதி பார்க்கத் திராணியற்ற கூட்டமாகவே ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி கும்பல் இருக்கின்றது. மேலும் மக்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை என்பதால், மக்களிடம் குறைந்தபட்ச செல்வாக்குள்ள ரஜினி போன்ற கழிசடைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றார்கள். ஏற்கெனவே ரஜினி இமயமலைக்குச் செல்வதும், அங்கிருக்கும் அம்மணக்குண்டி சாமியார்களிடம் ஆன்மீகம் கற்றுக்கொண்டதாக அடித்து விட்டிருப்பதும் கூடுதல் தகுதிகளாக வேறு அமைந்திருக்கின்றது. அதனால் ரஜினி என்ன சொன்னாலும் அதைத் தமிழ்நாட்டு மக்கள் கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வார்கள் என்ற அற்ப சிந்தனையில்தான் ரஜினியை பிஜேபி பயன்படுத்தி வருகின்றது. ரஜினியின் ஆன்மீக அரசியலும், பிஜேபியின் ஆன்மீக அரசியலும் வேறு வேறல்ல; இரண்டுமே பார்ப்பனியத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான். பன்றிகள் சாக்கடையில் உருண்டு புரள்வதும், மலத்தைத் தின்பதும் எப்படி தவிர்க்க முடியாத நிகழ்வோ, அதே போலத்தான் ஆன்மீக அரசியல் பேசுபவர்கள் பார்ப்பன கைக்கூலிகளாக மாறுவதும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என ரஜினி முத்திரை குத்தியதும், கஜா புயலால் சூறையாடப்பட்டு ஓட்டுமொத்த வாழ்வாதாரத்தையுமே இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மக்களை நேரில் சந்திக்க வராமல், பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு சென்று பல்லிளித்துக் கொண்டு மோடி நிற்பதும், வெவ்வேறு மன நிலையில் இருந்து தோன்றும் சிந்தனைகள் அல்ல. இரண்டுமே மக்களை மலிவாகப் பார்க்கும் கீழ்த்தரமான பார்ப்பனிய சிந்தனையின் வெளிப்பாடே ஆகும். அதனால் தான் மிக இயல்பாகவே ரஜினி, ஆர். எஸ்.எஸ் சிந்தனையுடன் ஒன்றுபட்டு விடுகின்றார். ஆனால் என்னதான் ரஜினி மோடிக்கு முட்டுக் கொடுத்தாலும், அது தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை என்பதுதான் உண்மை.

எந்த மக்கள் பிரச்சினைக்கும் களத்தில் இறங்கிப் போராடாத, குறைந்தபட்சம் கருத்துக் கூட தெரிவிக்கத் துப்பில்லாத ஒரு சினிமா கழிசடையை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் தமிழக மக்கள் வைத்திருக்கின்றார்கள். ரஜினியிடம் கருத்துக் கேட்டுதான் தமிழக மக்கள் தங்களின் சிந்தனையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு இழிந்த நிலையும் தமிழ்நாட்டில் இல்லை. நாய்கள் குரைப்பதையும், நரிகள் ஊளையிடுவதையும், பன்றிகள் உறுமுவதையும் எப்படி மக்கள் நேரம் செலவழித்து ரசித்துக் கேட்க விரும்புவதில்லையோ, அதே போலத்தான் ரஜினி என்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதியின் வெற்று உளறல்களையும் கேட்க விரும்புவதில்லை.

ரஜினி கட்சி ஆரம்பிப்பார், அதில் சேர்ந்து சீக்கிரம் பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடலாம் என்று பொண்டாட்டி தாலியை விற்று டிக்கெட் வாங்கியவர்களும், அவருக்கு கட் அவுட்டர்கள் வைத்தவர்களும், பாலாபிசேகம், பீர் அபிசேகம் செய்தவர்களும் காத்திருந்து காத்திருந்து அந்த ஆசை நிறைவேறாமலேயே நிராசையோடே செத்துப் போய்விட்டார்கள். எஞ்சி இருக்கும் ஒரு சிலரும் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ரஜினி ஒவ்வொரு முறையும் பேட்டி கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டு இருக்கின்றார். குறைந்தபட்சம் ரஜினி கட்சி ஆரம்பிப்பதையாவது பார்ப்போமா என்ற நப்பாசையில்தான் அவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. ஏற்கெனவே பிஜேபிக்கு தமிழக மக்கள் பாலூற்றி விட்டார்கள். அதனால் ரஜினி அதைப் பற்றி பேசி வீணாக நேரத்தை செலவழிக்காமல், தன் கட் அவுட்டர்களுக்கு பால் ஊற்றிய, இன்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவரது முதுபெரும் ரசிகர்களுக்கு பாலூற்றும் வேலையைப் பார்க்கலாம்.

- செ.கார்கி

Pin It