மோடி தலைமையிலான மத்திய அரசில் வங்கித் துறையில், அதிலும் கடன் வழங்குவதில் மட்டும் 72 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இத்தகவலை மத்திய ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது

கடன் என்ற பெயரில் மெகா சூறையாடல்

amit shah and modi 2தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலரும், பொருளியல் அறிஞருமான பிரசாந்த் போஸ் கேட்ட வினாக்களுக்கு ஆர்பிஐ மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளது. மேலும் கடந்த காங்கிரஸ் கூட்டணி (2009-2014) அரசில் நடந்த வங்கிக்கடன் முறைகேடுகளை விட மூன்று மடங்கு முறைகேடுகள் புண்ணியவான் (!) மோடியின் ஆட்சியில் நடந்துள்ளது. ஆர்பிஐ வெளியிட்ட இத்தகவலைக் குறிப்பிட்டு பிரசாந்த் போஸ் "புலனாய்வு அமைப்புகள் எங்கே சென்றன?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எத்தனை மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்? எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சரமாரி கேள்விகளைக் எழுப்பியுள்ளார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் நடைபெற்ற மெகா சூறையாடலுக்கு மத்திய அரசும், நிதித்துறையும் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுத்துறை வங்கி கணக்குகளில் 88 சதவீதம் இந்த கடன் மோசடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது .

ரிசர்வ் வங்கி தனது பதிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகளில் கடந்த 4 ஆண்டுகளில் (ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2018 வரை) 77 ஆயிரத்து ஐநூற்றி 21 கோடிகள் வங்கிக்கடன் என்ற பெயரில் சூறையாடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது மோடி சர்க்காரின் நான்கு ஆட்சியின் சாதனையாகும்.

காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாம் காலகட்டமாக 2009 ஏப்ரல் முதல் மார்ச் 2014 வரை 10 ஆயிரத்து அறுநூற்று 52 வழக்குகளில் 22 ஆயிரத்து 441 கோடிகள் கடன் சூறையாடல் நடத்தப்பட்டுள்து. ஆனால் மோடியின் 4 ஆண்டுகளில் முந்தைய அரசில் நடந்ததை விட 55 ஆயிரம் கோடிகள் அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மோடி ராஜ்யத்தில் 7 ஆயிரத்து நூற்றி 28 வழக்குகளின்படி 68 ஆயிரத்து முன்னூற்றி 50 கோடிகள் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியைவிட மும்மடங்கு

அதே வேளையில் முந்தைய காங்கிரஸ் அரசில் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடிகள் 5 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 331 வழக்குகளில்19 ஆயிரத்து 113 கோடிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளன.

மோடி ஆட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனியார் துறை வங்கிகளில் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து 27 வழக்குகளில் கூறும் தரவுப்படி 7 ஆயிரத்து 774 கோடிகள் கடன் எனும் பேரால் சுருட்டப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரசின் கடைசி ஐந்துகால ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட 2005 வழக்குகளில் 2, 670 கோடிகள் மோசடி செய்யப்பட்டுள்ளன.

காங்கிரசை மிஞ்சி சாதித்துக் காட்டுவோம் என மார்தட்டிய பாஜகவினர் செய்த சாதனைகளைப் பார்த்தேளா?

Pin It