Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டால் அன்றைக்கு அதுதான் தொலைக்காட்சிகளில் விவாதம். கருணாநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை சொன்னால் அதுதான் அடுத்தநாள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி, அடுத்த இரண்டு நாட்களுக்கு விவாதப்பொருள். Influential leadership personality ஆக இருந்தார்கள். ஆனால், மக்களும், அ.தி.மு.க.வினரும் கூட எப்பொழுது ஆட்சியைக் கலைப்பீர்கள் என்று ஸ்டாலினைக் கேட்கும் நிலையில் இருக்கிறார். இவர் செயல் தலைவர் அல்ல, செயல் படாத தலைவர்!.

mk stalin 200கருணாநிதி செய்த தவறுகளில் ஒன்று, கடைசிவரை ஸ்டாலினை தன்னுடைய இடுப்பிலே தூக்கி வைத்திருந்ததுதான். குழந்தைக்கு புட்டிப் பால் குடுப்பது போல கொடுத்து வளர்த்து விட்டார். இறக்கிவிட்டவுடன் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. செய்தியாளர்களிடத்தில் பேசும் பொழுது "ஆக... ஆக..." என்று மட்டும் கண்டிப்பாக பேசிவிடுவார்.

கருணாநிதி தான் நடமாடும் வரை பீனிக்ஸ் பறவை போல் இருந்தார். அரசியலில் தான் இயங்கும் வரை தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தார். வெள்ளை உடை அணிந்து வலம் வந்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்று கனா காண்கிறார் ஸ்டாலின். கடைசிவரை அந்த நாற்காலி எட்டாக் கனியாகிவிடும் போலிருக்கிறது. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான் மீதேன் முதல் ஹைடிரோகார்பன் திட்டம் வரை கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கதது.

சென்ற ஆட்சியில் கருணாநிதியின் குடும்பத்தினராலும், தி.மு.க., அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ஜெயலலிதா காவல் துறையில் ஒரு தனி பிரிவு ஒன்றை நிறுவினார் என்று சொன்னால், நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

பழம் கனிந்து பாலில் விழும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். பழம் கனிந்து அணில்கள் கொத்தி தின்றுக் கொண்டு இருக்கின்றன. இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிரார். கருணாநிதி மட்டும் நடமாடும் நிலையில் இருந்திருந்தால் ஆட்சியை எப்பொழுதோ கலைத்து இருப்பார் என்று அ.தி.மு.க.வினரே சொல்லுகிறார்கள்.

நாங்கள் கொல்லைப்புற அரசியல் செய்யமாட்டோம் என்று ஸ்டாலின் பேசுவது, மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தி.மு.க.வின் மீது நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. சாக்கடையின் நடுவில் நின்று கொண்டு, அகர்பத்தியைக் கொளுத்தி 'நாங்கள் புனிதமானவர்கள், எங்களைச் சுற்றி வாசம் அடிக்கிறது' என்று சொன்னால் எவ்வளவு அபத்தம்? நொண்டி குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு என்பது போல சமாளித்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதியின் திறமையில் ஒரு சதவீதம் கூட இவருக்கு இல்லை என்பதுதான் எதார்த்தம். கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது தானே? செய்... அல்லது செத்து மடி என்பது அன்றைய முழக்கமாக இருந்தது. செய்... முடியும் வரை செய் என்பதே இன்றைய இயக்கம். இந்த கேவலமான ஆட்சியில், தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், எதிர்க்கட்சி என்ன செய்து கொண்டி இருக்கிறது என்பதுதான் மக்களிடத்தில் நிலவும் குழப்பம்.

வாரிசு அரசியலை உற்பத்தி செய்வதற்கு தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று சொன்னவரின் வாரிசுதான் இவர். இவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியதாக இருக்கிறதா இல்லையா? அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள், முடிந்த வரையில் ஊழல் செய்து மொத்தமாக சுருட்டிவிடுவார்கள். ஆனாலும் நாம் அமைதியாக இருந்து விட்டு அரியணை ஏறிவிடலாம் என்று எண்ணுவது, குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்.

எண்பத்து ஒன்பது வயக்காட்டு பொம்மைகளை வைத்துக்கொண்டு, நூற்று முப்பது கொத்தடிமைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று கண்டுகொள்ளும்போது அறிவாளியாகிவிடுகிறான். தேங்கிக் கிடக்கும் தண்ணீர் கெட்டுப் போய்விடும் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன?

- தங்க.சத்தியமூர்த்தி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+2 #1 shanthi narayanan 2017-10-07 12:08
அதிமுகவினர் கூட ஏற்றுக்கொள்ளமுட ியாதபடிக்கு ஒரு கட்டுரை தீட்டிவிட்டிருக ்கிறார் கட்டுரையாளர்.
Report to administrator
+2 #2 Jeyaganapathi 2017-10-07 12:58
எழுத்தாளர்: தங் க. சத்தியமூர்த்தி,
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்

யாரிந்த எழுத்தாளன்? சுய விளம்பரம் தேடும் முயற்சியாக இது போன்று கண்டதையும் எழுதும் போக்கு அதற்கு கீற்று போன்ற இணைய தளங்கள் இடமளிப்பதும் வருத்தியகுறியது . மேலும் அரசியல் ரீதியாக கூட ஏற்றுக்கொள்ள முடியாத 4 வரி விமர்ச்சனம் எப்படி கீற்று வின் சமூகம்-இலக்கிய கட்டுரை வகையில் இணைக்கப்பட்டது என்பதும் கீற்று வின் நம்பகத்தன்மையும ், நடுநிலைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

முக.ஸ்டாலின் ஆளுமை குறித்து எண்ணற்ற விஷயங்களை பட்டியளிடலாம். மிக சமீபத்திய இரண்டு நிகழ்வுகளை சொலகிறேன்.

1. சாரணர் இயக்க தேர்தலில் எச்சு ராஜா வை தேர்வு செய்ய ஆளும் அரசு முற்பட்டபோது, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எதிர்ப்புத்தீ பற்றி மாநிலம் முழுக்க பேசப்பட்டு, விவாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ு எச்சு அறிவாலயம் நோக்கி ஓடி, அங்கு சில்லறை இல்லையப்பா என்று துரத்தி விட்டு கடைசியில் தோல்வி பெற்றார் எச்சு.

2. தமிழக காவல்துறை பயன்படுத்தும் வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி முறைகேடாக அரசின் பணம் டிஜிபி முதல்வர் உள்ளிட்டோரால் கையாடல் செய்யபட்டுள்ளது என்று அவர் கூறிய பின்னர் தான் கம்யூனிஸ்ட் கள் , பாமக என்று அறிக்கை விட ஆரம்பித்துள்ளார ்கள். விரைவில் இதுவும் பற்றி எரியும். டிஜிபி க்கு எதிராக.
குறிப்பு : இதுகுறித்து ஒரு பத்திரிக்கையாளர ் பல்லாயிரம் கோடி ஊழல் என்று திரித்த போது, திருத்தி 80 கோடி என்றார்.


ஒன்று மட்டும் நிச்சயம். எடப்பாடி என்பவர் நேற்றுவரை சாதாரண MLA தான். என்றாலும் முதல்வர் என்ற பொறுப்பை ஏற்ற பின்னர், அந்த பதவிக்குரிய வலிமையை எல்லைமீறியேனும் பயன்படுத்தி சொந்த கட்சியின் பொ.செ. மற்றும் து.மு.பன்னீர் என்று ஆட்டம் காட்டுவதும், பிஜேபி யின் முதல் அடிமையாய் மாநில அளவில் அனைத்து உரிமைகளையும் எழுதி கொடுத்தேனும் பதவியை காப்பாற்றிக்கொண ்டு இருக்கும் வரையில் சம்பாதிக்க துடிக்கும் எண்ணமும், அதே ஒத்த எண்ணம் கொண்ட MLA க்களும் என்று இருள் சூழ் உலகாக இருக்கும் தமிழகத்தில் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரம் முக. ஸ்டாலின் மட்டுமே.
Report to administrator
+2 #3 Aravindh 2017-10-07 13:25
இந்த கட்டுரை வன்மையாக கண்டிக்கதக்கது , எது வேண்டுமானலும் எழுதிவிடலாம் என்று இருக்கும் கோமாளிதனமானவர் இந்த சத்தியமூர்த்தி
Report to administrator
+2 #4 நக்கீரன் 2017-10-07 19:13
எல்லோரும் கருணாநிதி போல் திறமைசாரியாக இருக்க முடியாது. எல்லோரும் ஜெயலலிதா போல அல்லி இராச்சியம் செய்ய முடியாது. ஸ்டாலின் தனது பணிகளை சுறுசுறுப்பாக செய்கிறார். நேர்காணல் கொடுக்கும் போது அமைதியாக அதே சமயம் புத்திசாலித்தனம ாக பதில் அளிக்கிறார். இப்படியான கட்டுரைகளை கீற்று வெளியிட்டு தனது பெயரைக் கெடுக்கக் கூடாது.
Report to administrator
-1 #5 அன்பு 2017-10-08 13:16
மிக மோசமான கட்டுரை. எதிர்க்கட்சித் தலைவர் பணியை ஸ்டாலின் மிக நேர்த்தியாகவும் முறையாகவும் செய்கிறார். ஒரு குறையும் இல்லை. எல்லோரையும் கலைஞருடன் ஒப்பிடக்கூடாது. கேடுகெட்ட ஒரு ஆட்சியை வழங்கிவரும் அதிமுகவை கேள்விகேட்காமல் எதிர்கட்சியை மட்டும் குறைசொல்வது என்ன வகை அரசியல்???
Report to administrator
0 #6 s.sanjay 2017-10-08 14:44
கோமாளித்தனத்தின ் மொத்த வடிவம் இந்தக் கட்டுரை
சமகால அரசியலை சமகால தலைவர்களோடுதான் ஒப்பிட வேண்டும்...
சத்தியமூர்த்தியையும் பேரறிஞர் அண்ணாவையும் ஒப்பிட்டால் எப்படி கைகொட்டி சிரிப்போமோ அப்படி இந்தக் கட்டுரையைப் படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது...
நிறைய படியுங்கள் சத்தியமூர்த்தி. ... அப்பறமா எழுதலாம்...
Report to administrator
0 #7 விமலநாதன் 2017-10-08 16:58
தங்களின் கூற்று பெய்யென நிரூபிக்கும் நாள் விரைவில் வரும்...
அடிமைகள் கூடாரத்தில் இருக்கும் ஆடுகள் கூட தங்களின் நாட்கள் கசாப்பு கடை நோக்கி உள்ளதை என்பதினை அறிவர்...
Report to administrator
0 #8 Ramakrishnan 2017-10-09 10:22
Stalin should have been left alone 15 yrs back to make his mistakes and correct it. What MK did was selfish. Stalin will correct his mistakes but is age on his side? No is the answer. So many things could go wrong. With the BJP breathing down his neck and 2G verdict expected anytime his job isnt easy.
Report to administrator
0 #9 அறிவானந்தம் 2017-10-09 11:05
தி மு கழகத்தின் செயல்தலைவர் தனது பணியை முழுமையாக செய்து வருகிறார். உங்கள் தளத்தின் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளோம், அதனை கெடுக்கும் வண்ணம் கட்டுரை வருவது மனதிற்கு சற்று வருத்தம் அளிக்கிறது!
தி மு கழகம் பாரம்பரியம் மிக்க கட்சி இது ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல!?
Report to administrator
0 #10 ramanujam meganathan 2017-10-11 14:20
We need such criticism. Kalaignar Karunanidhi also faced such criticisms, but there was some ethical standards which now has completely collapsed for which both Kalaignar and Jayalalitha were responsible.
Report to administrator

Add comment


Security code
Refresh